அமெரிக்காவில் 13 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற காவல் அதிகாரி

0 2931

அமெரிக்காவின் சிகாகோவில் போலீஸாரால் 13 வயது சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

அந்த சம்பவத்தின் வீடியோ காட்சியை இரண்டு வாரம் கழித்து சிகாகோ போலீசார் வெளியிட்டுள்ளனர். ஒன்பது நிமிடம் ஓடக் கூடிய இந்த பாடி கேம் வீடியோ ஒரு காரில் இருந்து அந்த அடையாளம் தெரியாத காவல் அதிகாரி இறங்கி வருவதையும் தோலேடோ என்ற சிறுவனை மடக்கி கைகளை உயர்த்தச் சொல்வதையும் பின்னர் துப்பாக்கியால் சுடுவதையும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.சுடப்பட்ட சிறுவன் சுருண்டு விழுந்து உயிரிழந்தான்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டான்ட் என்ற கருப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவத்தையடுத்து போலீசாரின் அராஜகத்தை விளக்கும் இன்னொரு வீடியோ காட்சியாக இது கடும் சர்ச்சைக்குள்ளானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments