மேற்கு வங்காளத்தில் 5வது கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு: நாளை காலை வாக்குப்பதிவு

0 4682

மேற்கு வங்காளத்தில் 5 வது கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

அங்கு நாளை காலை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.  நாளை 5வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 

மொத்தம் 45 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் 39 பெண்கள் உள்பட 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஜல்பைகுரி, கலிம்போங், டார்ஜிலிங், நாடியா, வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் புர்பா வர்தமான் ஆகிய 6 மாவட்டங்களில் தேர்தல் நடக்கிறது.  தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments