மேற்கு வங்கத்தில் எஞ்சி இருக்கும் 4 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: மம்தாவின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்

0 1777
மேற்கு வங்கத்தில் எஞ்சி இருக்கும் 4 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: மம்தாவின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்

மேற்கு வங்கத்தில் எஞ்சி இருக்கும் 4 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.

கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் சூழலில், 8 கட்டங்களாக தேர்தல் நடத்தும் முடிவுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்தார். பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எஞ்சியிருக்கும் 4 கட்ட தேர்தல்களையும் ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆனால் எஞ்சிய தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என்று தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments