தமிழகத்தில் புதிதாக 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு: 4,176 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

0 2610
தமிழகத்தில் புதிதாக 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு: 4,176 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

மிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 7 ஆயிரத்து 987 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஒரே நாளில் மட்டும் 12 வயதுக்கு உட்பட்டவர்களில் 256 பேருக்கும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 41 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பெருந்தொற்றில் இருந்து 4 ஆயிரத்து 176 பேர் குணமடைந்துள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 90 வயது முதியவர் உள்பட 29 பேர் உயிரிழந்ததாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகரில் 2,558 பேரும்,. செங்கல்பட்டு மாவட்டத்தில் 685 பேரும் கோயம் புத்தூர் மாவட்டத்தில் 534 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments