ரெயில்களில் குளிர் சாதனபெட்டி பயணிகளுக்கு கம்பளி, படுக்கை விரிப்பு போன்றவை ரத்து: கொரோனா தொற்று பரவலை அடுத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு

0 2362
ரெயில்களில் குளிர் சாதனபெட்டி பயணிகளுக்கு கம்பளி, படுக்கை விரிப்பு போன்றவை ரத்து: கொரோனா தொற்று பரவலை அடுத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு

ரெயில்களில் குளிர் சாதனபெட்டி பயணிகளுக்கு கம்பளி, படுக்கை விரிப்பு போன்றவை ரத்து செய்யப்படுவதாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில்களில் குளிர் சாதனபெட்டி பயணிகளுக்கு தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு கம்பளி, படுக்கை விரிப்பு போன்றவை ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இதுவரையில் ஏ.சி. பெட்டி பயணிகளுக்கு அளித்து வந்த படுக்கை விரிப்பு, கம்பளி, தலையணை போன்றவை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து இயக்கப்படும் அனைத்து ரெயில்களிலும் முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த வசதிகள் ரத்து செய்யப்பட்டது குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments