உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் பெண் தலைமை நீதிபதியை நியமிக்கும் நேரம் வந்திருக்கிறது - தலைமை நீதிபதி

0 1297

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக, பெண் நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக, தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்திற்கோ, உச்சநீதிமன்றத்திற்கோ பெண் நீதிபதிகளை அதிகளவில் நியமிக்கவே கொலிஜீயம் விரும்புவதாக, தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

அதிலும் குறிப்பாக, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிகளுக்கு மூத்த பெண் நீதிபதிகளை நியமிக்க விரும்பினால், பெரும்பாலும் பிள்ளைகளின் படிப்பை காரணம் காட்டி மறுத்துவிடுவதாக, எஸ்.ஏ.பாப்டே தெரிவித்தார். இருப்பினும், உச்சநீதிமன்றத்திற்கு பெண் தலைமை நீதிபதியை நியமிக்கும் நேரம் வந்துவிட்டதாகவும், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments