விருதுநகர் : பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 4 தொழிலாளர்கள் காயம்

0 1363

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சந்தானபுரத்தில் செயல்பட்டு வரும் ராஜா என்பவருக்கு சொந்தமான பத்திரகாளி பட்டாசு ஆலையில் 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அங்குள்ள ஒரு அறையில் 4 தொழிலாளர்கள் ரசாயன கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பெண் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments