தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி..!

0 3273
தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி..! 25 ஆம் தேதிக்குள் 100 சதவிகிதம் பேரும் ஊசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய உத்தரவிட்டது சுகாதாரத்துறை

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்றார்.

இதுவரை 41 லட்சத்து 72 ஆயிரத்து 963 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தமிழகம் முழுவதும் நடைபெறும் தடுப்பூசி திருவிழா வை ஒட்டி அனைத்து இடங்களுக்கும் சுகாதாரப் பணியாளர்கள் நேரடியாக சென்று தடுப்பூசிகளை போட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். அடுத்த 10 நாளில் அதாவது வருகிற 25-ந்தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது என்றும், சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டனர் என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக செல்வவிநாயகம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments