"கொரோனா அச்சுறுத்தலால் 10,12- ஆம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைப்பு" -பஞ்சாப், ஒடிசா, குஜராத் மாநில அரசுகள் அறிவிப்பு

0 1753
"கொரோனா அச்சுறுத்தலால் 10,12- ஆம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைப்பு" -பஞ்சாப், ஒடிசா, குஜராத் மாநில அரசுகள் அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பஞ்சாப், ஒடிசா, குஜராத்தில் 10,12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பஞ்சாப்பில் 5,8,10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார். பிளஸ் 2 தேர்வு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அதே போன்று ஒடிசாவிலும் 10,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், 9,11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

குஜராத்திலும், 10,12 ஆம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை ஆய்வு செய்து, புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments