இந்த வாழ்க்கையை உன் கூடத்தான் வாழனும்... ஒரே ஒரு போன், ஓடோடி வந்த தந்தை...

0 3700

தனது குழந்தைக்குச் சிகிச்சை பெற வந்த மருத்துவமனையின் தரையில் படுத்து உறங்கும் தந்தையின் புகைப்படம் ஒன்று தற்போது வைரல் ஆகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தில் உள்ள பார்மிங்க்டோன் நகரில் வசிப்பவர் சாரா டங்கன். ஆசிரியையாக பணியாற்றும் இவர், தனது கணவர் ஜோ டங்கன் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். ஜோ டங்கன் சிமெண்ட் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார்.

அண்மைக் காலங்களில் பணிச் சுமை காரணமாக, சில நாட்களாகவே ஜோ டங்கன் 12 மணி நேர ஷிப்ட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திடீரென ஒரு நாள், ஷிப்ட் முடித்த ஜோ டங்கனிற்கு, சாராவிடமிருந்து ஒரு போன் வந்தது. அதில், இளைய மகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை கொண்டு செல்லப்போவதாகவும் சாரா தெரிவித்தார்.

செய்தியைக் கேட்ட ஜோ டங்கன், நீ தனியாகச் செல்ல வேண்டாம் நானும் வருகிறேன் என்று கூறிவிட்டு, சற்றும் தாமதிக்காமல் வீட்டிற்குச் சென்றார். உடல் சோர்வைப் பொருட்படுத்தாமல், உடனே Refresh ஆகி விட்டு, மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஒரு மணி நேரம் வண்டி ஒட்டிக்கொண்டு சென்றார் ஜோ.

அங்கு, ஜோ-சாராவின் மகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. மறுநாள் காலையில் ஜோ வேலைக்குச் செல்ல வேண்டி இருந்ததால், சிகிச்சையின்போது, தன் குழந்தையின் பேபி சீட்டின் மேல் தலை வைத்து, மருத்துவமனை தரையிலேயே படுத்து சிறிது நேரம் உறங்கினார்.

இந்த காட்சியைச் சாரா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து பலரும் ஜோவை பாராட்டி வருகின்றனர். இதுகுறித்துக் கூறியுள்ள சாரா, கணவர் ஜோவிற்கு நன்றி தெரிவித்ததோடு, இந்த வாழ்க்கையை உன்னைத்தவிர நான் வேற யாருடன் வாழ விரும்பவில்லை என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments