மகாராஷ்டிரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு என முதலமைச்சர் தகவல்..! 100 டன் ஆக்சிஜனை இலவசமாக வழங்குவதாக ரிலையன்ஸ் அறிவிப்பு

0 3516
மகாராஷ்டிரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு என முதலமைச்சர் தகவல்..! 100 டன் ஆக்சிஜனை இலவசமாக வழங்குவதாக ரிலையன்ஸ் அறிவிப்பு

கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படும் வகையில் மகாராஷ்டிரத்துக்கு நூறு டன் ஆக்சிஜனை இலவசமாக வழங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் கொரோனா தடுப்பு மருந்தும், ஆக்சிஜன் சிலிண்டர்களும் தட்டுப்பாடு என மாநில அரசு தெரிவித்துள்ளது. தேவையான மருந்துகளையும் ஆக்சிஜன் சிலிண்டர்களையும் வழங்கி உதவ வேண்டும் எனக் கோரிப் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் ஜாம் நகரில் உள்ள தனது பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் இருந்து மகாராஷ்டிரத்துக்கு நூறு டன் ஆக்சிஜனை இலவசமாக வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் சிண்டேயும் உறுதிப்படுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments