செவ்வாயில் செயலிழந்து வரும் விண்கலம்... தடுத்து நிறுத்தப் போராடும் விஞ்ஞானிகள்!

0 47475

செவ்வாய் கிரகத்தில் கடுமையான வானிலை மாற்றம் காரணமாக செயலிழந்து வரும் விண்கலத்துடன் ஆராய்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். 

மனிதர்களுக்குப் பல காலமாகவே பூமியைத் தவிர வேறு கிரகங்களில் உயிரினங்கள் இருக்குமா என்ற கேள்வி இருந்து கொண்டேதான் இருக்கிறது. உயிர் வாழ்வதற்கு ஏற்ப சூழ்நிலைகள் இருக்கலாம் என்ற கணிப்பில் பல கோள்களைக் கண்டறிந்திருந்தாலும், செவ்வாய்க் கிரகத்தில் என்ன இருக்கிறது, அங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா, இதற்கு முன்னர் அங்கே உயிர்கள் இருந்ததா, இனி உருவாக வாய்ப்பிருக்கிறதா எனப் பல கோணங்களில் பல கேள்விகள் ஆராய்ச்சியாளர்கள் கண்முன்னே விரிகின்றன.

இந்த நிலையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் (Persevrence Rover ) என்ற விண்கலத்தை அனுப்பியது.

அதன்படி , செவ்வாய்க் கிரகத்தின் Elysium Planitia என்கிற செவ்வாய் சமவெளியில் தரையிறங்கிய இந்த ரோவர் விண்கலம், ஆய்வுப் பணிகளைச் மேற்கொண்டு வருகிறது.

விண்கலம், செவ்வாய்க் கிரகத்தை படம் பிடித்து நாசாவுக்கு அனுப்பியது. மேலும், மண் துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளையும் பெர்சவரன்ஸ் விண்கலம் சேகரித்து வருகிறது. அந்த விண்கலத்துடன் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. இன்ஜெனியூனிட்டி (Ingenuity) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஹெலிகாப்டர் 1.8 கிலோ எடையுடன் உள்ளது.

நாசா அனுப்பிய இந்த இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டர், பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தில் இருந்து பிரிந்து, செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, மனித குல வரலாற்றிலேயே மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியது.

செவ்வாய்க் கிரகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, ரோவர் விண்கலம் முதல் செல்பி எடுத்து அனுப்பியது.

கடந்த சில மாதங்களாக கணிக்க முடியாத வானிலை காரணமாக, கடுமையான பாதிப்புகளை அந்த விண்கலம் சந்தித்து வருகிறது. புழுதிப்புயல் காரணமாக விண்கலத்தில் பல அடுக்குகளில் தூசி நிறைந்து காணப்படுகிறது. இதனால் சூரிய ஒளியை பெறமுடியாமல் தவித்து வருகிறது. இப்படியே சென்றால், வருங்காலத்தில் லேண்டர் செயலற்றுப் போய்விடும். அதைத் தடுக்கும் முயற்சியாக பேட்டரியின் செயல்திறனைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, லேண்டரில் உள்ள பல்வேறு பாகங்களை தூக்க நிலையில் வைக்க நாசா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணமாக, குறிப்பிட்ட சில நிகழ்வுகளை கணக்கிட முடியாமல் போகுமே தவிர, லேண்டர் முற்றிலும் செயலிழக்கமால் பாதுகாக்கப்படும்.

Elysium Planitia வில் ஜூலை மாத இறுதியில், குளிர்காலம் நிறைவு பெறும். ஜூலை மாதத்திற்கு பிறகு மீண்டும் சூரிய ஒளியைப் பெற்று மீண்டும் லேண்டர் பழைய வேகத்தில் இயங்கும் என்றும், இருப்பினும் செவ்வாய்க் கிரகம் என்பது கணிக்க முடியாதது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments