சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: தயார் நிலையில் 12ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையங்கள்..!

0 3026
சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: தயார் நிலையில் 12ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையங்கள்..!

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், 12ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நோயாளிகளுக்கு தடையின்றி விரைவாக சிகிச்சை கிடைக்க சென்னையில் 14 இடங்களில் தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்திப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 4500 படுக்கைகளும், அண்ணா பல்கலைகழகத்தில் 1500 படுக்கை வசதிகளும், சென்னை பல்கலைகழகத்தில் 900 படுக்கை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல ஐ.ஐ.டி.யில் 820 படுக்கை வசதிகளும், செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் 700 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments