தமிழகத்திலும் பிளஸ் டு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா? : பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

0 2410
தமிழகத்தில் கொரோனா வேகமெடுத்துள்ள நிலையில் பிளஸ் 2 தேர்வை ஒத்திவைக்கலாமா? அல்லது திட்டமிட்டபடி நடத்தலாமா? என ஆலோசனை

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து தலைமைச் செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பரவல் காரணமாக, சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதோடு, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்திலும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments