'நடிகை ராதா என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தார்!'- சப் இன்ஸ்பெக்டர் வசந்தராஜா சராமரி குற்றச்சாட்டு

0 80859
சப் இன்ஸ்பெக்டருடன் நடிகை ராதா

நடிகை ராதா தன் பழைய நட்புகளை தொடர்ந்து வருவதால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படுவதாக சப் இன்ஸ்பெக்டர் வசந்தராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை சாலிகிராமம் லோகையா தெருவை சேர்ந்தவர் திரைப்பட நடிகை ராதா. இவர் சுந்தராடிராவல்ஸ் என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.ராதாவுக்கு ஏற்கனவே திரைப்பட தயாரிப்பாளர் ஒருவருடன் திருமணமாகி குழந்தை ஒன்றும் உள்ளது. தனது முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விவாகரத்து செய்து விட்டு தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவருடன் ராதவுக்கு நட்பு ஏற்பட்டு அவரை திருமணம் செய்துள்ளார்.

தற்போது எண்ணூர் காவல் நிலையத்தில் வசந்தராஜா உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். வசந்தராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மறறும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். சப் இன்ஸ்பெக்டர் வசந்தராஜா, சாலிகிராமத்தில் நடிகை ராதாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். மேலுட்ம, நடிகை ராதாவுக்கும் வசந்தராஜாவுக்குமிடையே கருத்துவேறு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நடிகை ராதாவின் நடத்தையில் சந்தேகமடைந்த எஸ்ஐ ராஜா அவரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ராதாவின் தாயார் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்துள்ளார். வசந்தராஜா ராதாவின் தாயாரிடத்தில் தன் மனைவி நடத்தை குறித்து முறையிட்டுள்ளார். ஆனால் ராதாவின் தாயார் வசந்தராஜாவை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வசந்தராஜா ராதாவின் தாயாரை அடிக்க முயற்சி செய்ததாகவும் அதனால் வசந்த ராஜா மீது தன் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் தொடர்பாக எஸ்.ஐ வசந்தராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வசந்த ராஜா திருவான்மியூரில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய போது ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் தனக்கு திருமணம் ஆகி விட்டது குறித்து ராதாவுக்கு முன்பே தெரியும் என்றும் கூறியுள்ளார். தன்னை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்டதாகவும் சட்ட ரீதியாக பிரச்சினைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனறும் ராதா கூறியதால் அவரை இரண்டாவதாக திருமணம் செய்தாகவும் சப் இன்ஸபெக்டர் வசந்த ராஜா கூறியுள்ளார்.

மேலும், ராதாவின் பழைய நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது தெரியவந்ததையடுத்து கண்டித்தேன் என்றும் தொழிலதிபர் ஒருவர் மற்றும் கோடம்பாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் உள்ளிட்ட பல ஆண் நண்பர்களுடன் தற்போது வரை தொடர்பில் இருப்பதாகவும் அந்த தொடர்புகளை துண்டிக்க சொன்ன போது ராதா மறுத்து விட்டதாகவும் வசந்தராஜா கூறியுள்ளார். தன்னுடைய முதல் மனைவியை முறையாக விவாகரத்து செய்யாத நிலையில் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தனக்கு தெரியாமல் எடுத்து ராதா கணவர் பெயரில் வசந்தராஜா என்று அரசு ஆவணங்களில் பதிந்து கொண்டதாகவும் வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

பெயர் மாற்றப்பட்ட ஆவணங்களை வைத்து தன்னிடம் தெரிவிக்காமல் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் ஒன்றை அண்மையில் ராதா வாங்கியுள்ளதாக வந்தராஜா குற்றம் சாட்டியிருக்கிறார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments