மும்பையில் கொரோனா உறுதியாகி பெரிய அளவில் பாதிப்பில்லாதவர்களுக்கு 4 ஸ்டார், 5 ஸ்டார் ஹோட்டல்களில் சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்பந்தம்

0 1824
மும்பையில் கொரோனா உறுதியாகி பெரிய அளவில் பாதிப்பில்லாதவர்களுக்கு 4 ஸ்டார், 5 ஸ்டார் ஹோட்டல்களில் சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்பந்தம்

மும்பையில், கொரோனா தொற்று உறுதியாகி, பெரிய அளவில் பாதிப்பில்லாமல் இருப்பவர்களுக்கு 4 ஸ்டார், 5 ஸ்டார் ஹோட்டல்களில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

கொரோனா பாசிட்டிவ் ஆகி, எவ்வித அறிகுறி இல்லாமல் இருப்பவர்களுக்கும், தீவிர, அவசர சிகிச்சை தேவையில்லாமல் இருப்பவர்களுக்கும் இவ்வாறு ஹோட்டலில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அனுமதி அளிக்கின்றனர்.

ஹோட்டல் அறை வாடகையாக 6 ஆயிரம் ரூபாயும், மருத்துவ வசதிகளுக்காக 4 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக மருத்துவமனைகள் வசூலிக்க அனுமதிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 20 அறைகளாவது கொரோனா நோயாளிகளுக்கு இருக்க வேண்டும் என்பதுடன், மருத்துவர்கள், செவிலியர்களின் சேவையும் அளிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments