"கொரோனா மரணத்தை தடுக்க முடியாது...வயதானால் சாகத்தான் வேண்டும்!" - அமைச்சரின் பேச்சால் அதிர்ச்சி!

0 3577

"வயதானால் சாகத்தான் வேண்டும்" என கொரோனா மரணங்கள் அதிகரிப்பது குறித்து மத்தியப்பிரதேச அமைச்சர் கூறியுள்ள கருத்து அம்மாநில மக்களை அதிர்ச்சியில்  ஆழ்த்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் நோய் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும்  அதிகரித்து வருகிறது. மத்தியப்பிரதேச மாநிலத்தில், புதன்கிழமையன்று ஒரே நாளில் 9,720 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. அதேபோன்று 51 பேர் உயிரிழந்த நிலையில்,  மொத்த உயிரிழப்பு எண்ணிகை 4,312 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும், 326 பேர் உயிரிழந்திருப்பது அம்மாநில மக்களிடையே பீதியை ஏற்படுத்தி  உள்ளது.

image

இந்த நிலையில், மத்தியப்பிரதேச அமைச்சர் பிரேம் சிங் படேலிடம், கொரோனாவால் மக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறதே எனச் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது,  "கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதை யாராலும் தடுக்க முடியாது. வயதானால் மக்கள் சாகத்தான் வேண்டும்"  என்று பதிலளித்தார்.

மேலும், "அனைவரும் கொரோனா பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்தே பேசுகின்றனர். இந்த பிரச்சனை குறித்து நாங்கள் சட்டசபையிலும் விவாதித்துள்ளோம். மக்கள்  முகமுடி அணிவதும், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் அவசியமானது. மக்கள், மருத்துவர்களைக் கலந்தாலோசிக்க வேண்டும். நாங்களும் மருத்துவர்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம்" என்றும் அவர் கூறினார்.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்கச் செய்வதற்குப் பதிலாக, " வயதானால் மக்கள் சாகத்தான் வேண்டும்" என அமைச்சர்  ஒருவரே கூறியிருப்பது, மத்தியப்பிரதேச மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments