மங்களூரு கப்பல் விபத்தில் மாயமான 9 மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க உள்துறை, பாதுகாப்பு துறை அமைச்சருக்கு கனிமொழி கடிதம்

0 1267
நடுக்கடலில் மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் மாயமான 9 மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க உள்துறை, பாதுகாப்பு துறை அமைச்சருக்கு கனிமொழி கடிதம்

ங்களூரு அருகே படகு மீது கப்பல் மோதியதில் நடுக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள் உள்ளிட்ட 9 மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு திமுக எம்பி கனிமொழி கடிதம் எழுதியுள்ளர்.

தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்த 14 மீனவர்கள் சென்ற விசைப்படகு மீது சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் இரு தினங்களுக்கு முன் மோதியது. இந்த விபத்தில் 2 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். 3 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

ராமநாதபுரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் உள்பட எஞ்சிய 9 பேர் மாயமானதால், அவர்களை கண்டுபிடித்து மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments