கோயிலுக்குள் பூஜை போட்டு கோவில் உண்டியல் பணத்தை திருடி சென்ற பலே திருடன் !

0 8122

சென்னை அடுத்த தாம்பரத்தில், கோயிலுக்குள் புகுந்த கொள்ளையன், பழம் வைத்து வழிபாடு நடத்திவிட்டு உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

சேலையூரிலுள்ள பொன்னியம்மன் கோயிலுக்கு நள்ளிரவில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளான். பின்னர், வாழைப்பழம் வைத்து, பத்தி சூடம் ஏற்றி வழிபாடு நடத்திவிட்டு, 3 உண்டியல்களில் இருந்த பணம் மற்றும் சாமி கழுத்தில் கிடந்த செயினையும் திருடிச் சென்றான்.

தொடர்ந்து, அருகிலுள்ள மற்றொரு கோயிலிலும் 50ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments