தன்னை 2ஆவது திருமணம் செய்து துன்புறுத்துவதாக எஸ்.ஐ மீது சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா புகார்

0 61510

சுந்தரா டிராவல்ஸ் திரைப்பட நடிகை ராதா, தன்னை 2ஆவது திருமணம் செய்து கொண்ட காவல் உதவி ஆய்வாளர் அடித்து துன்புறுத்துவதாக, போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக, சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் நடிகை ராதா அளித்துள்ள புகாரில், தமக்கு திருமணமாகி, 16 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த நிலையில், சாலிகிராமத்தில் உள்ள சொந்த வீட்டில் தாயாருடன் வசித்து வருவதாக கூறியுள்ளார்.

தற்போது எண்ணூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் வசந்தராஜ், திருவான்மியூர் காவல்நிலையத்தில் பணியாற்றியபோது, தம்முடன் பழகி, தன்னை தாலிக்கட்டி திருமணம் செய்துகொண்டதாக, நடிகை ராதா தெரிவித்துள்ளார். இந்நிலையில், தன் மீது சந்தேகம் அடைந்து, தகாத வார்த்தைகளால் பேசி, அடித்து துன்புறுத்துவதாகவும், எஸ்.ஐ வசந்தராஜ் மீது நடிகை ராதா புகார் மனுவில் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments