கொரோனா அதிகரிக்கும் சூழலில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை நடத்த வேண்டுமா? - மு.க.ஸ்டாலின் கேள்வி

0 3321

கொரோனா இரண்டாவது அலையால் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை நடத்த வேண்டுமா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையும் உயிரிழப்பும் அதிகரித்து வரும் நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை இந்த நேரத்தில் நடத்துவது சரியா? என வினவியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments