அந்நியன் இந்தி ரீ மேக் : தன்னிடம் முறையாக அனுமதி பெற வில்லை என ஷங்கருக்கு, தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ்

0 2242

ந்நியன் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தன்னிடம் முறையாக அனுமதி பெற வில்லை என இயக்குநர் ஷங்கருக்கு, அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்நியன் படத்தை நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக இயக்குநர் ஷங்கர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழில் அப்படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஷங்கருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், அந்நியன் படத்திற்கான முழு காப்புரிமையும் தன்னிடமே உள்ளதாகவும், தன்னுடைய அனுமதியின்றி படத்தை ரீமேக் செய்வதோ அல்லது கதைக்கருவை வைத்து வேறு படம் உருவாக்குவதோ சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்நியன் படத்தை ரீமேக் செய்வதற்கான அடுத்தக்கட்ட வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments