"தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்" -அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

0 2520

கொரோனாவை கட்டுப்படுத்தும் முகமாக, வார இறுதி நாட்களில், ஊரடங்கு அமல்படுத்தப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

தலைநகரில், அண்மை நாட்களாக வகைதொகையின்றி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியானது. நாளுக்கு, நாள் நிலைமை மோசமடைவதால், டெல்லி துணை நிலை ஆளுநருடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் கெஜ்ரிவால், வார இறுதி நாட்களில், ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறார்.

வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல், திங்கட்கிழமை காலை 6 மணி வரையில், ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். ஊரடங்கு சமயத்தில், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், மருத்துவ தேவைகளுக்காகவும் மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும் என டெல்லி முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments