வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை... வனத்துறையிடம் சிக்கியது!

0 3113
வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை... வனத்துறையிடம் சிக்கியது!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து தாய், மகள், மகன் என 3 பேரை தாக்கிய சிறுத்தையை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். 

குடியாத்தம் அடுத்த கலர்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் குடும்பத்தினர், நேற்றிரவு காற்றோட்டத்துக்காக கதவைத் திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் எங்கிருந்தோ வந்த சிறுத்தை ஒன்று, வேலாயுதம் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவி பிரேமா, அவரது மகன் மனோகரன், மகள் மகாலட்சுமி ஆகியோரை தாக்கியது. சிறுத்தையிடம் இருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என வீட்டை பூட்டிவிட்டு அவர்கள் வெளியே ஓடி வந்துவிட, சிறுத்தை வீட்டுக்குள் மாட்டிக் கொண்டது.

வீட்டுக்குள் வைத்து சிறுத்தையைப் பூட்டிவிட்டு சுற்றி இருந்தவர்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தகவல் அறிந்து சென்ற வனாத்துறையினர் வீட்டுக்குள் சிக்கிய சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முதலில், நீண்ட கொம்பில் செல்போனை கட்டி வீட்டுக்குள் விட்டு, சிறுத்தை நடமாட்டத்தை அறிந்த வனத்துறையினர், கூண்டு வைத்து பிடிக்க முயற்சித்தனர். அது பலனளிக்காததால், மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சிறுத்தையை ஸ்டெச்சரில் வைத்து கொண்டு வந்த வனத்துறையினர், கூண்டுக்குள் அடைத்து கொண்டு சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments