தமிழகத்தில் அரியர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

0 10779

தமிழகக் கல்லூரிகளின் அனைத்து மாணவர்களுக்கும் மே மாதம் முதல் அரியர் தேர்வுகளை நடத்த உள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா சூழலில் அரியர் தேர்வுகளைத் தமிழக அரசு ரத்து செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரியர் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்க இயலாது எனத் தெரிவித்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்தது. ஆன்-லைன் மூலமாகவோ அல்லது ஆப்- லைன் மூகமாகவோ அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், தேர்வு நடத்தும் தேதி குறித்துப் பல்கலைகழக மானியக் குழுவின் ஆலோசனை பெற்று முடிவு செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments