குவார்ட்டருக்குள் குட்டி பாம்பு... கட்டிங் போட்டவர் மயக்கம்!

0 36637
பாட்டிலுக்குள் கிடக்கும் குட்டி பாம்பு

டாஸ்மாக் விற்பனையில் மட்டுமல்ல மது தயாரிப்பிலும் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது, மதுவில் பாம்பை ஊற வைத்து மதுவை விற்பனைக்கு அனுப்பியுள்ளது.

நடிகர் வடிவேலு நடித்த 24 ம் புலிகேசி படத்தில் மது தயாரிப்பில் ஈடுபடும் போது, பாம்பு சட்டையை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டுமென்கிற காட்சி இடம் பெற்றிருக்கும். ஆனால், நம்ம டாஸ்மாக் அதையெல்லாம் மிஞ்சி மதுவில் பாம்பை ஊற வைத்தே விற்றுள்ளது. 

அரியலூர் மாவட்டம் ஜெயம் கொண்டம் இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் இவர் சுத்தமல்லியில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார். ்சுத்தமல்லி கிராமத்திலுள்ள அரசு டாஸ்மாக் கடையில் குவார்ட்டம் மது பாட்டில் வாங்கி அருந்திவிட்டு மீதியை பிறகு குடிக்கலாம் என்று வைத்துள்ளார்.

இந்நிலையில் , வீட்டில் இருந்தவர்கள் மது பாட்டிலை பார்த்தபோது மதுபாட்டிலில் குட்டி பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சுரேஷிடம் கூறியதால் பதற்றம் அடைந்து மயங்கி விழுந்தார் .

இதனையடுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சுரேஷ் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது பாட்டிலில் பாம்பு இருக்கும் வீடியோ வெளியிடப்பட்டு பரவி வருகிறது. மது பிரியர்களே எச்சரிக்கையாக இருக்கும்படி ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments