பில் தொகையை செட்டில் செய்யாததால் கொரோனா நோயாளியின் உடலை ஒப்படைக்க மறுத்த தனியார் மருத்துவமனை: குடும்பத்தினரின் காரையும் பறித்து வைத்த அதிர்ச்சி சம்பவம்

0 2911

குஜராத்தில், சிகிச்சைக்கான பில் தொகையை செட்டில் செய்யாததால் கொரோனா நோயாளியின் உடலை ஒப்படைக்க மறுத்த தனியார் மருத்துவமனை ஒன்று, அவரது குடும்பத்தினரின் காரையும் பறிமுதல் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

குஜராத்தின் வல்சாடு (Valsad) மாவட்டத்தின் வாப்பி (Vapi) நகரில் 21st Century என்ற பெயரில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு, கடந்த வாரத்தில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட நபர், கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

பில் தொகையை செட்டில் செய்யும் வரை, உடல் ஒப்படைக்கப்படமாட்டாது எனக் கூறியதோடு, அந்த தனியார் மருத்துவமனை காரையும் பறித்து வைத்துக்கொண்டது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவானதைத் தொடர்ந்து, உடல் ஒப்படைக்கப்பட்டு, காரும் விடுவிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments