சென்னையில் 15 நாட்களுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

0 8802

பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை 15 நாட்களுக்குப் பின் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகளும், டீசல் விலை 13 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலையைக் கடைசியாக மார்ச் இறுதியில் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துக் கொண்டன. அதன்பின் கடந்த 15 நாட்களாக விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை சற்றுக் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து 92 ரூபாய் 43 காசுகளாக உள்ளது. டீசல் விலை 13 காசுகள் குறைந்து 85 ரூபாய் 75 காசுகளாக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments