'இதயத்தையும் கல்லீரலையும் தந்தைக்கு கொடுத்து விடுங்கள்! 'கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட மகள்

0 63764
பவித்ராவும் அவர் எழுதிய கடிதமும்

சென்னையில் தன் தந்தைக்கு இதயத்தையும் கல்லீரலையும் கொடுத்து விடுமாறு கடிதம் எழுதி விட்டு மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சாத்துமா நகரைச் சேர்ந்த பவித்ரா என்ற 24 வயது இளம் பெண் பி.காம் படித்ததிருந்தார். தன் தோழியின் தந்தை சேகர் என்பவரிடத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 59 வயதான சேகர் பவித்ராவுடன் எடுத்த புகைப்படங்களை காட்டி இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார். ஆனால், பவித்ரா மறுத்துள்ளார். தொடர்ந்து, சேகர் கட்டாயப்படுத்தவே 2019 ஆம் ஆண்டு சேகரை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று பவித்ரா கொலை செய்து விட்டார். 

வண்ணாரப்பேட்டை போலீஸார் , பவித்ராவை கைது செய்தனர். இந்த நிலையில், ஜாமீனில் வந்த பவித்ரா தன் பெற்றோருடன் வசித்து வந்தார். இதற்கிடையே,  பவித்ராவின் தந்தை பாஸ்கருக்கு மஞ்சள் காமாலை காரணமாக கல்லீரல் செயலிழந்து போனது. இதயத்தில் துளை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தந்தையின் நிலை கண்டு மன உளச்சலுக்கு ஆளான  பவித்ரா தற்கொலை செய்து கொண்டார். டி.சி மேடம் என்று  குறிப்பிட்டு பவித்ரா பல பக்கங்களுக்கு ஒரு  கடிதம் எழுதியுள்ளார். அதில், தனது இதயம் மற்றும் கல்லீரலை தந்தைக்கு தானமாக கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்ப்ட்டுள்ளது. மேலும்,  நான் உங்களை காப்பாற்றுவேன் அப்பா . எங்கே தேடினாலும் எனக்கு உங்களை மாதிரி அப்பா, அம்மா கிடைக்க மாட்டாங்க . நான் குற்றவாளியோ அல்லது நிரபராதியோ  இனிமேல் அதை பற்றி கவலைப்பட தேவையில்லை என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். பவித்ராவின் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால், இறந்து போன உடலில் இருந்து கண்களை தவிர வேறு எந்த பகுதியையும் எடுத்து மற்றவர்களுக்கு பயன்படுத்த முடியாது என்றும் மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்துதான் இதயம், கல்லீரல் உள்ளிட்ட பிற உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்கு பொருத்த முடியும். இந்த பெண் உயிரோடு இருந்து கல்லீரலை கொடுத்திருக்கலாம் . இதனால், எந்த பலனும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments