சென்னையில் அதிகாலை முதலே இடியுடன் கொட்டித் தீர்த்த கனமழை

0 2941
சென்னையில் அதிகாலை முதலே இடியுடன் கொட்டித் தீர்த்த கனமழை

சென்னையில் அதிகாலையில் பெய்த கனமழையால் மயிலாப்பூர், ராயப்பேட்டை சாலையில் மரம் விழுந்து மின்கம்பம் சரிந்தது.

அதிகாலை முதலே திடீரென இடியுடன் பெய்த கனமழையால் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தியாகராய நகர், திருவான்மியூர் கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

அதேபோல் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வந்த மக்களுக்கு அதிகாலையில் மழை பொழிந்தது ஆறுதலை அளித்து உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments