வரும் ஜூன் 1 முதல் தங்க ஆபரணங்களுக்கு ஹால் மார்க் முத்திரை கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

0 3457
வரும் ஜூன் 1 முதல் தங்க ஆபரணங்களுக்கு ஹால் மார்க் முத்திரை கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

வரும் ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து விற்பனை செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நுகர்வோர் விவகாத்துறை செயலாளர் லீனா நந்தன் தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடு ஏற்கனவே பல முறை ஒத்திப்போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு கோரி இதுவரை கோரிக்கைகள் எதுவும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

எனவே, நடப்பாண்டு ஜூன் 1-ம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருள்களுக்கு ஹால்மார்க் முத்திரையிடுவது கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments