ஆந்திராவில் கோவில் திருவிழா: "வறட்டியால்" விரட்டி விரட்டி கிராம மக்கள் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்வு!

0 3386

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக வறட்டி எனப்படும் உலர் சாணத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்வு அரங்கேறியது.

அஸ்பாரி மண்டலம் கைருப்பாலா என்ற கிராமத்தில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப்பிறப்புக்கு மறுநாள் பிடக்க எனும் இந்தத் திருவிழா நடைபெறுகிறது. பத்ரகாளியும் வீரபத்திர சுவாமியும் காதலித்ததாகவும் பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு இடையே அவர்களது திருமணம் நடைபெற்றதாகவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது.

காதலுக்கு எதிர்ப்பு நிலவிய காலகட்டத்தில் இந்த விநோத சண்டை நடைபெற்றதாகவும் நம்பப்படுகிறது. அதன்படி நேற்று நடந்த திருவிழாவில் கிராம மக்கள் இரு தரப்பாகப் பிரிந்து மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த வறட்டிகளை எடுத்து புழுதி பறக்க ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments