நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை... காயங்களோடு தப்பிய குடும்பத்தினர்!

0 11675
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து தாய், மகள், மகன் என 3 பேரை தாக்கிய சிறுத்தை வீட்டுக்குள் ஆக்ரோஷத்துடன் உலவும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.

குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் - கலர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். நேற்றிரவு காற்றோட்டத்துக்காக வீட்டின் கதவைத் திறந்து வைத்து தூங்கி இருக்கின்றனர் வேலாயுதம் குடும்பத்தினர். நள்ளிரவு 2 மணியளவில் எங்கிருந்தோ வந்த சிறுத்தை ஒன்று, வீட்டுக்குள் புகுந்து வேலாயுதத்தின் மனைவி பிரேமா, அவரது மகன் மனோகரன், மகள் மகாலட்சுமி ஆகியோரை தாக்கி இருக்கிறது. சிறுத்தையிடம் இருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என அவர்கள் வெளியே ஓடி வந்துவிட, வீட்டுக்குள் இருந்த அறையில் கோழியின் சப்தம் கேட்டு சிறுத்தை அறைக்குள் நுழைந்திருக்கிறது.

வீட்டோடு வைத்து சிறுத்தையைப் பூட்டிவிட்டு சுற்றி இருந்தவர்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், வீட்டுக்குள் சிக்கியிருக்கும் சிறுத்தையைப் பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments