அதிகரித்து வரும் கொரோனா பரவல்... இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகையில் மாற்றம்!

0 2218
இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகையில் மாற்றம்!

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணத் திட்டத்தில் மாறுதல் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், வரும் 26ம் தேதி முதல் போரிஸ் ஜான்சன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் போரிஸ் ஜான்சனின் பயண நாட்களை குறைப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாகவும், ஆனால் மோடியுடன் சந்திப்பு இருக்கும் வகையில் பயணத் திட்டம் மாற்றப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments