குடிபோதையில் பெற்ற மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தந்தை..! 3 மாதம் கர்ப்பிணியாக இருந்த பெண் பலியான பரிதாபம்

0 42031
குடிபோதையில் பெற்ற மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தந்தை..! 3 மாதம் கர்ப்பிணியாக இருந்த பெண் பலியான பரிதாபம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்ப்பிணி மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பி ஓடிய தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

கரடிக்கல் கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் வீட்டிற்கு அவரது மகள் வெங்கடலட்சுமி மற்றும் மருமகன் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் விருந்துக்கு வந்திருந்தனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான அருணாச்சலம் மனைவி மாதவியுடன் குடிபோதையில் சண்டை போட்டுள்ளார்.

ஆத்திரத்தில் நாட்டுத் துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட முயன்றுள்ளார். அப்போது குறுக்கே வந்த மகள் வெங்கடலட்சுமி மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தலைமறைவானஅருணாச்சலத்தை தேடி வருகின்றனர். 3 மாத கர்ப்பிணியாக இருந்த வெங்கடலட்சுமி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 



 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments