தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்தது..! கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை: மக்கள் மகிழ்ச்சி

0 3957
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்தது..! கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை: மக்கள் மகிழ்ச்சி

மிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மிதமானது முதல், கனமழை வரையில், மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

ஓசூர் வட்டாரத்தில் தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையை கண்டு, மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பதிவானது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments