"அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவினை எடுக்க வேண்டும்" :மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 3732
"அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவினை எடுக்க வேண்டும்" :மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

"கொரோனா தொற்று தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி’ என்ற கொள்கை முடிவினை எடுத்து தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு அதிகாரிகளும் போதிய விழிப்புணர்வை இப்போதாவது ஏற்படுத்தி, அனைவருக்கும் தடுப்பூசி போடுவதில் முனைப்புடன் பணியாற்ற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மக்கள் அனைவரும் - தவறாமல் முகக்கவசம் அணிந்து தமிழக அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும், அனைவரும் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments