மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு ஒருதரப்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்த எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பு தாக்கியதால் பரபரப்பு

0 3144
மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு பா.ஜ.க.வினர் மரியாதை செலுத்த வி.சி.க.வினர் எதிர்ப்பு: வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினர் இடையே கைகலப்பு

துரையில் அம்பேத்கர் சிலைக்கு பா.ஜ.க.வினர் மரியாதை செலுத்த எதிர்ப்பு தெரிவித்து விசிகவினர் கோஷமிட்டதால் இருதரப்பினர் இடையே கைகலப்பு உருவானது.

தல்லாகுளத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிலையருகே கூடியிருந்தனர்.

அப்போது, மதுரை பாஜக நிர்வாகிகள் சிலர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவினர் கோஷம் எழுப்பிய நிலையில், வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒருதரப்பினர் கற்கள் வீசியதாக சொல்லப்படுகிறது.

போலீசார் சமாதானப்படுத்த முயற்சித்தும், பெண் தொண்டர்கள் உட்பட சில விசிகவினர், முண்டியடித்துக் கொண்டு பா.ஜ.க.வினரை தாக்க முற்பட்டனர். பின்னர், நிலைமையை உணர்ந்து பா.ஜ.க.வினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments