சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதி 3 மீனவர்கள் பலியான நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் மாயம்

0 6609
சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதி 3 மீனவர்கள் பலியான நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் மாயம்

சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதி 3 மீனவர்கள் பலியான நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் மாயமானதால் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள், மேற்கு வங்கத்தை சேர்ந்த 7 மீனவர்கள் என 14 மீனவர்கள் சென்ற விசைப் படகு மீது சிங்கப்பூரை சார்ந்த சரக்குக் கப்பல் மோதியது. இதில் படகு மூழ்கியதால் ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற மீனவரும் மேற்கு வங்கத்தைச் ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டனர்.

மேலும், விபத்தில் இறந்து போன குளச்சல் பகுதியை சேர்ந்த இருவர் உள்பட மூன்று மீனவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மாயமான 9 மீனவர்களை தேடும் பணியில் இந்திய கடலோர காவல்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

விபத்து ஏற்படுத்திய கப்பலை, இந்திய கடலோர காவல்படை சிறைப்பிடித்து வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments