தமிழ்நாட்டில் இன்று புதிதாக 7819 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

0 6110
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 7819 பேருக்கு கொரோனா பாதிப்பு

மிழகத்தில் புதிதாக 7 ஆயிரத்து 819 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஒரே நாளில், பெருந்தொற்றில் இருந்து 3 ஆயிரத்து 464 பேர் குணமடைந்துள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி, திருவள்ளூரில் 23 வயது இளைஞர் உள்பட 25 பேர் உயிரிழந்ததாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத்தில் இருந்து வந்த தலா ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் 2,561 பேரும்,. செங்கல்பட்டு மாவட்டத்தில் 772 பேரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 540 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 19 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments