தமிழகத்தில் தடுப்பூசித் திருவிழா..! ஆர்வத்துடன் பயன்பெற்ற மக்கள்

0 4715
தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கியது..! பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டபடி, தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்

மிழகத்தில் தடுப்பூசித் திருவிழாவையொட்டி அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு முகாம்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டோரும், முன்களப் பணியாளர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனாவை ஒழிக்க நாடு முழுவதும் தடுப்பூசித் திருவிழாவை நடத்த வேண்டும் என மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். அதன்படி பிற மாநிலங்களில் ஏப்ரல் 11 முதல் 14 வரை தடுப்பூசித் திருவிழா நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 14, 15, 16 ஆகிய 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசித் திருவிழா நடத்தப்படுகிறது. 45 வயதுக்கு மேற்பட்டோர், அனுமதி பெற்ற முன்களப் பணியாளர்கள் என ஒரு நாளைக்கு 2 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலை 9 மணி முதலே 45 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் பலரும் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

மதுரை:

மதுரையில் சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாமை மாநகராட்சி ஆணையர் விசாகன், நகர்நல அலுவலர் குமரகுருபரன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். மதுரையில் போதிய அளவில் தடுப்பு மருந்து உள்ளதாகவும், 15 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் விசாகன் தெரிவித்தார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள முதியோர் இல்லத்தில் 24 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 11 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் போடப்பட்டது. முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 28 நாட்களுக்குப் பின் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 120 முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 3 நாட்களில் 15 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments