வேளச்சேரி தொகுதியில் 92 வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்..!

0 5883
வேளச்சேரி தொகுதியில் 92 வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்..!

சென்னை வேளச்சேரி தொகுதியில் உள்ள 92 வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றது பெரும் சர்ச்சையானதால், வரும் 17 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மறு வாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வாக்குச்சாவடியில் 548 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்களுக்கு மறுவாக்குப்பதிவு குறித்த தகவலை தண்டோரா அடித்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு நாளை மாலை 7 மணி வரை பிரசாரம் மேற்கொள்ள வேட்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மறுவாக்குப்பதிவின் போது வாக்காளர்களின் இடதுகை நடுவிரலில் மை வைக்கப்படவுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments