குக் வித் கோமாளியால் திறப்பு விழா அன்றே பூட்டப்பட்ட புதிய கடை..! செல்பி புள்ளைங்க அட்டகாசம்

0 12976
குக் வித் கோமாளியால் திறப்பு விழா அன்றே பூட்டப்பட்ட புதிய கடை..! செல்பி புள்ளைங்க அட்டகாசம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் புகழ் உடன் செல்பி எடுக்க முண்டியடித்த முரட்டு ரசிகர் கூட்டத்தால் அவர் திறந்து வைத்த புதிய கடையை உடனடியாக இழுத்துப்பூட்டி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஸ்பிரிங் முடியுடன் தோன்றி ரசிகர்களை சிரிக்க வைத்தவர் காமெடி நடிகர் புகழ்..! தற்போது சில படங்களிலும் நடித்து வருகின்றார்

இந்த நிலையில் நெல்லையில் தனது செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை கடையின் திறப்பு விழாவுக்கு குக் வித் கோமாளி புகழ் வருவதாக விளம்பரப்படுத்தி பெரிய அளவில் கூட்டத்தை சேர்த்தார் உரிமையார் நாதர்ஷா என்பவர், . கடையை திறந்து விட்டு தனது புதிய காரில் ஏறி நின்ற போஸ் கொடுத்த நடிகர் புகழுடன் செல்பி எடுக்க முரட்டு ரசிகர்கள் முண்டியடித்தனர்

ஆளாளுக்கு நடிகர் புகழின் கையை பிடித்து இழுத்து செல்பி எடுப்பதில் தீவிரம் காட்டியதால், கொரோனா சமூக இடைவெளி, முககவசம் , சானிடைஸிங் என அனைத்து விதிமுறைகளும் காற்றில் பறந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் லத்தியை சுழற்றி கூட்டத்தை களைத்தனர், இதனால் நடிகர் புகழும் விட்டால் போதும் என்று அங்கிருந்து காரில் புறப்பட்டுச்சென்றார்

நாதர் ஷா கடைக்கு வந்த நடிகர் புகழை காண திரண்ட கூட்டத்தால் உருவான நாரதர் கலகத்திற்கு கிளைமேக்ஸில் டுவிஸ்ட் வைத்தது நெல்லை மாநகராட்சி...! புதிய கடைக்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், கொரோனா விதிமுறையை புதிய கடை திறப்பு விழாவில் பின்பற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டி திறந்த அன்றே கடையை இழுத்துப்பூட்டி சீல் வைத்தனர்.

சில லட்சங்கள் கொடுத்து கடையை திறக்க நடிகரை அழைத்து வந்த உரிமையாளர் நாதர்ஷா மாநகராட்சிக்கு அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதே முன் எச்சரிக்கையையும் , நடவடிக்கையையும் தேர்தல் பிரச்சாரத்திலும் அதிகாரிகள் கெடுபிடியுடன் காட்டியிருந்தால் தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை இவ்வளவு வேகத்தில் பரவி இருக்காது என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments