அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தம்..!

0 59007
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தம்..! ஆன்லைன் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதால் நடவடிக்கை என விளக்கம்.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் ஒரு லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த ஆன்லைன் செமஸ்டர் தேர்வு முடிவுகள் கடந்த 11-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதில், ஒரு லட்சம் மாணவர்களுக்கு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

அதே சமயம், தேர்வு எழுதிய போது ஏதேனும் ஒலி எழுப்பினால், லேசாக கண் சிமிட்டினால் கூட முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதப்படுவதாக கூறியுள்ள மாணவர்கள், தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments