சேலத்தில் ரூ.10 லட்சத்திற்கு சிறுமி விற்கப்பட்ட விவகாரம்: சிறுமியின் பெற்றோர் மற்றும் தொழிலதிபர் கைது

0 85004
சேலத்தில் ரூ.10 லட்சத்திற்கு சிறுமி விற்கப்பட்ட விவகாரம்: சிறுமியின் பெற்றோர் மற்றும் தொழிலதிபர் கைது

சேலத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு சிறுமி விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சிறுமியின் பெற்றோர் மற்றும் தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த சுமதி தனது 7 வயது மகளை குகை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரும், ரோட்டரி சங்க நிர்வாகியுமான கிருஷ்ணன் என்பவரிடம் விற்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் தாய் பேசிய செல்போன் உரையாடல் வெளியான நிலையில், சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், சிறுமியின் பெற்றோர் சுமதி- சதீஷ், மற்றும் தொழிலதிபர் கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், சிறுமிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments