நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு..!

0 11715
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு..!

கொரோனா அச்சுறுத்தலால், மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

12 ஆம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ கல்வி வாரியம் ஏற்படுத்த உள்ள அப்ஜக்டிவ் மதிப்பீடு வாயிலாக 10 ஆம் வகுப்பு மாணவர்களின் வெற்றி தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளி வைக்கப்பட்டுள்ள 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பின்னர் நடத்தப்படும். மறுதேதி குறித்து ஜூன் ஒன்றாம் தேதி ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். டெல்லியில் பிரதமர் மோடியை கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் சிபிஎஸ்இ உயர் அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments