இந்தியாவில் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல்: ராகுல்காந்தி கருத்து

0 2744

இந்தியாவில் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்துத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு நிலவுவதால், வெளிநாட்டுத் தடுப்பு மருந்துகளின் பயன்பாட்டுக்கு உடனடி ஒப்புதல் வழங்க வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்திருந்தார். இதை விமர்சித்த பாஜகவினர், வெளிநாட்டு மருந்து நிறுவனங்களுக்காக ராகுல் குரல் கொடுப்பதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஸ்புட்னிக் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது குறித்து கூறியுள்ள ராகுல், முதலில் அவர்கள் உன்னைக் கண்டுகொள்ள மாட்டார்கள், அடுத்து அவர்கள் உன்னைப் பார்த்துச் சிரிப்பர், அடுத்து உன்னிடம் சண்டையிடுவர், அடுத்து நீ வெற்றி பெறுவாய் என குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments