ஏர் இந்தியாவில் அரசின் பங்குகளை விற்கும் நடவடிக்கை செப்டம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் எனத் தகவல்

0 1918

ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாருக்கு விற்கும் நடவடிக்கைகள் செப்டம்பர் மாதத்தில் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தில் அரசுக்கு உள்ள பங்குகள் முழுவதையும் விற்கத் திட்டமிட்டு அதை வாங்க விரும்பும் நிறுவனங்களிடம் முதற்கட்ட ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. டாட்டா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.

அவற்றில் தகுதியுள்ள நிறுவனங்களிடம் மட்டும், நிதி ஒப்பந்தப் புள்ளி அளிக்கும்படி கோரப்படும். இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாகவும், வரும் செப்டம்பருக்குள் உடன்பாடு எட்டப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments