தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில்

0 256759
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?

அடுத்த 2 வாரங்களுக்கு முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அரசின் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனா தொற்று குறைய வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்தார்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா உறுதியானாலும் அதனுடைய பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்ற அவர், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி விரைவில் தமிழகத்திலும் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments