தமிழகத்தில் தடுப்பூசித் திருவிழா... மக்கள் பயன்பெற அழைப்பு!

0 2968
தமிழகத்தில் தடுப்பூசித் திருவிழா... மக்கள் பயன்பெற அழைப்பு!

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு முகாம்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளின்படி பிற மாநிலங்களில் ஏப்ரல் 11 முதல் 14 வரை தடுப்பூசித் திருவிழா நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், அம்மா மினி கிளினிக்குகள், அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என நாலாயிரத்து 328 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்றுவரை 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த இருநாட்களில் மட்டும் ஒரு நாளில் ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது. 45 வயதுக்கு மேற்பட்டோர், அனுமதி பெற்ற முன்களப் பணியாளர்கள் என ஒரு நாளைக்கு 2 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலை 9 மணி முதலே 45 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் பலரும் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

மதுரையில் கொரோனா தடுப்பூசித் திருவிழாவின் ஒருபகுதியாக சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாமை மாநகராட்சி ஆணையர் விசாகன், நகர்நல அலுவலர் குமரகுருபரன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

மதுரை மாநகராட்சியில் போதிய அளவில் தடுப்பு மருந்து உள்ளதாகவும், 15 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் விசாகன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments